தமிழகத்தில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ்.. 47 பேருக்கு ஆல்பா வைரஸ்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2021, 9:08 AM IST
Highlights

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் மற்றும் 47 பேருக்கு ஆல்பா வகை வைரஸ் தொற்று  இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் மற்றும் 47 பேருக்கு ஆல்பா வகை வைரஸ் தொற்று  இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்து சுகாதாரத் துறை வல்லுனர்கள் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1159 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சமுதாய பரவல், குடும்ப வழி பரவல், மீண்டும் நோய்த் தொற்றால் பாதித்தவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மீதான பாதிப்பு , 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதிகம் நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்ட இளைஞர்கள் , வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் இனை நோய் பாதிப்புகள் அற்ற கொரோனோ நோயாளிகள் என பல்வேறு வகைப்படுத்துதல் படி மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில்  554 மாதிரிகளின் முடிவுகளை பெங்களூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முடிவுகள் வெளியாகிய 554 மாதிரிகளில் 386 மாதிரிகளில் அதாவது 70 சதவீதம் B.1.617.2 என்ற டெல்டா வகை உருமாறிய கொரோனோ வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர B.1.1.7 என அழைக்கப்படும் ஆல்பா வகை கொரோனோ 47 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஏற்கனவே கேரளா, கர்நாடக, மஹாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்திலும் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  முடிவுகள் வெளியாகிய 554 மாதிரிகளில் 12வயதுக்குட்பட்ட 96 சிறுவர்களும் அடங்குவர். இதில் 73 குழந்தைகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  (76%) தெரியவந்துள்ளது. மேலும் 66 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 55 நபர்கள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் கட்ட அறிக்கை அடிப்படையில் 2 அலை கொரோனா பரவலில் டெல்டா வகை தொற்று முக்கிய பங்கு வகித்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கவதாக புதிய வகை  உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனோ உருமாற்றம் அடிப்படையில்..

B.1.617.2 (டெல்டா )     73 ( 76% )
B.1                                    14 (14.6%)
B.1.617.1 (கப்பா)           3 (3.1%)
B. 1.1.7 (ஆல்பா )           2 ( 2.1%)
B.1.604                              1  (1%)

 

click me!