மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ்.. இதுவரை தமிழகத்தில் இல்லை.. சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2021, 10:18 AM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனோ கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் தற்போது வரை டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனோ கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் தற்போது வரை டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒட்டுமொத்த நாட்டையும் நிலை குலைய வைத்த நிலையில், பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தற்போது அந்த வைரஸ் தொற்று பரவல் குறையத்தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இதுவரை  1159 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. 554 மாதிரிகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், 386 மாதிரிகள் டெல்டா வகை உருமாறிய கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 21 மாதிரிகள் எந்த ஒரு வகைபாட்டிலும் உறுதி செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மீதமுள்ள 605 மாதிரிகள் மீதான மரபணு குறித்த ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா ப்ளஸ் வகைகளை உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது வரை அந்த பாதிப்புகள் தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 
 

click me!