கொரொனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் டெல்லி.!! கண்டுபிடித்த சிகிச்சை முறையில் மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால்!!

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2020, 10:25 PM IST
Highlights

கொரோனா வைரஸ்க்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல ரிசல்ட்டை தந்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

கொரோனா வைரஸ்க்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல ரிசல்ட்டை தந்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கானொளிக்காட்சி மூலம் பேட்டியளித்தார் அவர்.


பிளாஸ்மா சிகிச்சை முறை என்றால் என்ன?
 கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.அப்படிஅவர்களது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும். 

கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் டெல்லியில் 4 நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்லீரல், பைலரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் ஆகியோர் பிளாஸ்மா சிகிச்சை குறித்து விளக்கினார்கள்.

கடந்த சில நாட்களில், எல்.என்.ஜே.பி  மருத்துவமனையில் 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அளிக்கப்பட்டது. இப்போது வரை அதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள தீவிர நோயாளிகளில் குறிப்பிட்ட சிலருக்கு பிளாஸ்மா சோதனையை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களில், நாங்கள் அதிகமான சோதனைகளை நடத்துவோம். பின்னர் அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிப்பதற்கு அடுத்த வாரம் அனுமதி பெறுவோம். எனவே கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!