டெல்லி கலவரம் பாஜக தூண்டி விட்டதா.? நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2020, 11:09 PM IST
Highlights
டெல்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

T.Balamurukan

 டெல்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறை ஆனது. இதில் போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 13 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர தில்லி போலீஸ் போராடி வருகிறது. 

டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கபில் மிஸ்ரா. ஜாஃபர்பாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் சௌக்கில் சிஏஏ-வுக்கு ஆதரவான குழுவினரை கபில் மிஸ்ரா வழிநடத்தினார். கபில் மிஸ்ரா,'ஜாஃப்ராபாத் மற்றும் சந்த் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தில்லி காவல் துறையினருக்கு மூன்று நாள் வழங்கப்படுகிறது. இதன்பிறகும், காரணம் கூறி நியாயப்படுத்த முயற்சிக்காதீர், நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்" என்று பதிவு செய்திருந்தார். விடியோவில் பேசி அதை மக்களிடத்தில் பரவவிட்டார்.அதில்,டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையே நாங்கள் அமைதி காப்போம். அதற்குப் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லை என்றால் காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்க மாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.

இந்நிலையில் டெல்லி, கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகின்றது.பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் ஆசாத் மற்றும் முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜஹத் ஹபிபுல்லாஹ் போன்றவர்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சமூக விரோதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். ஷஹீன் பாக் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு பல்வேறு விதமான மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாளை உச்சநீதிமன்றத்தில் ஷஹீன் பாக்  தெடர்பான இரண்டு மனுக்களுடன் இந்த மனுக்களையும் இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

click me!