தினகரனின் குடும்பத்தையே வளைக்கும் டெல்லி போலீஸ் - மனைவி அனுராதாவிடமும் விசாரணை?

 
Published : Apr 27, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
தினகரனின் குடும்பத்தையே வளைக்கும் டெல்லி போலீஸ் - மனைவி அனுராதாவிடமும் விசாரணை?

சுருக்கம்

delhi police planning to investigate dinakaran wife anuradha

விசாரணைக்காக டிடிவி.தினகரனை சென்னை அழைத்து வந்துள்ள டெல்லி போலீசார், அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் டிடிவி தினகரனிடம் தற்சமயம் டெல்லி குற்றப்பிரிவு குமுற குமுற விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று இரவும் அவரை சென்னையிலேயே தங்க வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

விசாரணை வளையம் பெரிதாகிக் கொண்டே செல்லும் நிலையில் டெல்லி போலீசாரின் அடுத்த கட்ட கவனம் டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மீது திரும்பியுள்ளது. மனையிடம் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டால் அதற்கும் காரணம் இருக்கிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 

யார் இந்த அனுராதா?

சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதா. ஜெயா தொலைக்காட்சியின் எம்.டி.ஆகவும் அனுராதா செயல்பட்டவர். இப்பதவியில் இருந்து அனுராதா விலகியதும், அவரது சகோதரியான பிரபாவதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் அதிகாரப்பூர்வ நிர்வாகியாக இளவரசியின் மகன் விவேக்கே உள்ளார். 

அனுராதவிடம் விசாரணைத்த நடத்துவதற்கு ஜனார்த்தனே முழு முதல் காரணம் ஆகும். வீட்டு வேலை முதல் அலுவலக பணி வரைக்கும் ஜனார்த்தனனே அனுராதவின் உதவியாளர் என்பதால், இம்முடிவை டெல்லி போலீசார் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!