இலை லஞ்ச வழக்கில் டிடிவி தினகரன் ஆஜர் - 3 வது நாளாக கிடுக்கிபிடி விசாரணை

First Published Apr 24, 2017, 4:08 PM IST
Highlights
delhi police invested to dinakaran still 3rd day


இரட்டை இலை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி குற்றபிரிவு போலீசார் முன் டிடிவி தினகரன் 3வது நாளாக ஆஜரானார்.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் அளித்தனர்.

அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு நேற்று முன்தினம் நேரில் டிடிவி ஆஜரானார். அப்போது அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து 2 வது நாளாக தினகரன் நேற்று ஆஜரானார். அவரது உதவியாளாரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் டிடிவி தொலைபேசி அழைப்புகளையும் சோதனை செய்தனர். 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் தினகரன் பதில் அளிக்க திணறியதாக தெரிகிறது.

இந்நிலையில், 3 வது நாளாக இன்றும் டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன்பு ஆஜரானார். 

click me!