டெல்லி – மீரட் ஸ்மார்ட் சாலையைத் திறந்து வைத்த மோடி…. என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

First Published May 28, 2018, 5:58 AM IST
Highlights
delhi-Meerat smar road opened by PM modi


டெலலி- மீரட் இடையே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 14 வழி ஸ்மார்ட் சாலையை பிரதமர் மோடி நாட்டுககும் அர்ப்பணித்தார். 149 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மீரட் வரையிலான 149 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிழக்கு விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல்லை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் 5–ந்தேதி பிரதமர் மோடி நாட்டினார். இந்த 149 கி.மீ. நீள சாலையில் டெல்லியில் இருந்து 27.74 கி.மீ. தூரத்துக்கு 14 வழிச்சாலையாகவும், அதன்பிறகு மீதம் உள்ள தூரம் 6 வழிச்சாலையாகவும் இருக்கும்.

இதில் முதல் கட்டமாக ரூ.842 கோடி செலவில் 9 கிலோ மீட்டர் நீளத்துக்கு 14 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலையில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலையின் இரு புறமும் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

சாலையின் இரு பக்கங்களிலும் சைக்கிள்கள் செல்ல தனிப்பாதை என பல சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன விரைவுச் சாலையின் மூலம் டெல்லி–மீரட் இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும் என்றும், டெல்லியில் மாசு 27 சதவீதமும், போக்குவரத்து நெரிசல் 41 சதவீதமும் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பக்பத் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு நாளைக்கு 12 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 27 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் கோடி செலவில் 28 ஆயிரம் கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

டெல்லி–மீரட் இடையேயான இந்த விரைவுச்சாலையின் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், இதன்மூலம் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும்  தெரிவித்தார்.

click me!