டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் கொரோளா 2வது கோரத்தாண்டவம் ஆடியதையடுத்து கடந்த ஏப்ரல் 19ம் தேதி 6 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இதனால், அங்கு ஒவ்வொரு வாரமாக முதல்வர் கெஜ்ரிவால் ஊரடங்கை நீட்டித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய ஊரடங்கு, நாளையுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கினை மேலும் ஒரு வாரம் வரை நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;- டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்படுவோர் விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது.
டெல்லியில் வரும் மே 31ம் தேதி காலை 5 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தால், மே 31க்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.