பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி.. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது FIR.. சிசிடீவி காட்சிகளை ஆராயும் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2021, 11:00 AM IST
Highlights

அவர்களது போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதுடன் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் 12 மணிக்கு மேல் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நிபர்ந்தனை விதித்திருந்தனர். 

விவசாயிகள் டெல்லியில் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்பாக இதுவரை 22 பேர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் சிங்கு எல்லை உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அறவழயில் போராடி வந்த விவசாயிக்கள் குடியரது தினமான நேற்று நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.

அங்கு நடைபெற்ற காட்சிகள் விவசாயிகள் விவேகத்தை இழந்து விட்டார்களா என எண்ணவைத்துள்ளது. அதாவது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சிங்கு எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

  

அவர்களது போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதுடன் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் 12 மணிக்கு மேல் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நிபர்ந்தனை விதித்திருந்தனர். ஆனால் காலை 8:30 மணிக்கே, ராணுவ அணிவகுப்பு தொடங்கவதற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர் பேரணி தொடங்கினர். இதனால் டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவியது.  நாட்டின் தலைநகரின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர்  எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் திடீரென அத்துமீறிய தடைகளை உடைத்து மத்திய டெல்லி நேக்கி உள்ளே நுழைய முயன்றனர்.

அவர்களுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் பேரணி செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.  அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் விவசாயிகள் கட்டுக்கடங்கவில்லை. இதனால் போலீசார்  தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். இதனால் பேரணி கலவரமான வெடித்தது. இதனையடுத்து கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள்  மத்திய டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டைமீது காலிஸ்தான் கொடியை நாட்டினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. 

அதனைத்தொடர்ந்து இணையதள சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டதுடன், டெல்லி மற்றும் அதன் எல்லைப்பகுதிகள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கலவரத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சா் அமித்ஷா உயர்மட்ட கூட்டத்தை கூட்டினார். அப்போது உடனே கூடுதல் துணை ராணுவப் படையினரை தலைநகருக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல் டெல்லி போலீசாரும் போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதிரடியாக களத்தில் இறங்கிய டெல்லி போலீசார், கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியது வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்  கண்டு வருகின்றனர். இதுவரை 22 எப்ஐஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  

செங்கோட்டை மற்றும் சிங்கு எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  மறுபுறம் மெட்ரோ ரயில் நிர்வாகம் செங்கோட்டை மற்றும் ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவாயிலை மூடியுள்ளது. அதே நேரத்தில் டெல்லியில் நடந்த வன்முறைக்குப் பின்னர் அரியானாவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலமைச்சர் கட்டார் உத்தரவிட்டார். அதேபோல் டெல்லி சோனா பட், பல்வால் மற்றும் ஜஜ்ஜரை  ஒட்டியுள்ள மூன்று மாவட்டங்களில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!