தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.. இல்லையெனில் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து 10ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டம்.

By T BalamurukanFirst Published Oct 27, 2020, 8:02 AM IST
Highlights

மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்த பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் அதன் மாநிலத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் மதுரையில் பேட்டி  :    

 மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்த பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் அதன் மாநிலத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் மதுரையில் பேட்டி  :     

மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆலோசனை கூட்டம் பழனிபாரதி மாநில செயல் தலைவர் தலைமையில் நடைபெற்றது .இதில், மாநிலத்  தலைவர் கு பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 
கூட்டம் முடிவில் மாநில தலைவர் பாலசுப்ரமணியம் செய்தியாளர் சந்தித்தார்..

தமிழக அரசு வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்|ளது .
இதில், குறிப்பாக டாஸ்மாக் பணியாளர்கள் நிரந்தரமான ஊதிய விகிதம் இல்லாமலும் தேவையான அளவிற்கு ஊதிய உயர்வுகள் அளிக்கப்படாமல் ஆனாலும் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள் .
இதை கணக்கில் எடுத்துக்கொண்டு விலைவாசியை கணக்கில் எடுத்துக் கொண்டும் சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் அதோடு 11.17 என்பதற்கு பதிலாக 21.6 என்ற வகையில் 30 சதவீத போன்ற அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் அதே போல கூட்டுறவுத் துறை நிர்வாகத்தில் பணியாற்றிவரும் ரேஷன் கடை பணியாளர்கள் மூன்று விதமாகச் வழங்கப்பட்டு வருகிறார்கள்.

ரேஷன் கடை பணியாளர் களை பொறுத்த அளவில் அவர்கள் பணியாற்றும் கூட்டுறவுத்துறை கடன் சங்க நிர்வாகத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது. அவர்கள் செய்வது சேவையை ஆகும் இந்த விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் அனைத்து ரேஷன் கடை பணியாளர் களுக்கும் அடையாளங்களுக்கும் 30 சதவீத போனஸ் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இந்த இரண்டு பணியாளர்கள் உடைய சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களுடைய உறவினர்களும் அவர்கள் பணியாற்றிய போது கணக்கில் எடுத்துக்கொண்டு கடந்த ஆண்டைப் போல 20% நிறுத்திக்கொள்ளாமல் 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 பாலசுப்பிரமணியன் சிறப்புத் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் நிர்வாகம் கேட்கவில்லை இதைக் கேட்காமல் இருப்பது அடிப்படை காரணம் அன்றாடம் வசூலாகும். தொகையை அவர்கள் கையிலேயே வைத்துக் கொள்வதற்கான வசதியை உருவாக்கிக்கொண்டு அதிகாரிகள் அதிலிருந்து குறிப்பிட்ட கணிசமான தொகையை மாதந்தோறும் கப்பமாக பெறுவதற்காகவே இந்த கோரிக்கையை தொடர்ந்து நிலுவைவில் வைத்துள்ளார்கள் .
உடனடியாக தமிழக அரசு தலையிட்டு அன்றாடம் வசூலாகும் தொகையை அரசு நிர்வாகமே வாகனங்களில் வந்து வசூலிக்க வேண்டும். சென்னையில் உள்ளது போல மாநிலம் முழுவதும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறோம்
அவர்களைப் பொறுத்த அளவில் அவர்களது கோரிக்கைகள் நீண்ட காலமாக . நிறுவையில் உள்ளதால் வருகின்ற 25.11./20 அன்று மாநிலம் முழவதும் ஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலக கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்பதை தெரிவிக்கிறோம்.
 

click me!