
ஜெயலலிவின் மரணத்துக்கான அனைத்து ஆதாரமும் தன்னிடம் உள்ளது. இதற்க நீதி விசாரணை தேவை என்றும் அதிமுகவின் உண்மையான வாரிசு நான்தான் என தீபா கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டு முன்பு சசிகலா அணி என்றும், தற்போது எடப்பாடி அணி சென்று செயல்படுகிறது. மற்றொரு அணி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படுகிறது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் பிரவேசம் ஆனார். இதையொட்டி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதன்படி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதைதொடர்ந்து தீபா, கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா சென்றார். அப்போது, அங்கு தன்னை சிலர் தாக்கியதாக கூறினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தீபா பேட்டியளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுகவின் உண்மையான வாரிசு நான்தான். சசிகலா குடும்பத்துடன் சேர்ந்து, எனது சகோதரர் தீபக் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதற்கு, வெளியில் இருந்து பலர் காரணமாக இருக்கிறார்கள்.
தற்போது உள்ள இரு அணியிலுமே, போட்டி நடக்கிறது. இவர்களின் போட்டியால் என்னை கட்சியை வளர்க்க விடாமல் தடுக்கிறார்கள். இதில் இரு அணிகள் மட்டுமின்றி சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரின் கூட்டு சதியும் இருக்கிறது.
என்னை கொலை செய்ய திட்டமிடுவிது மட்டுமில்லை. ஜெயலலிதா மரணத்துக்கும் ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதற்கான அனைத்து ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்.
அதேபோல் என்னிடம் 2011ம் ஆண்டு நடந்த சம்பவம் முதல் தற்போது ஜெயலலிதா இறப்பு வரை என்னிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, என் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டினார்கள். அதை பற்றி நான் புகார் செய்தேன். அதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தற்போதைய ஆட்சி சரியில்லை.
தற்போது என் கட்சியில் எந்த ஒரு கூட்டமும் நடத்த முடியவில்லை. தொண்டர்களை பார்க்க முடியவில்லை. மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்காள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.