தீபக் தடாலடி .....! போயஸ் கார்டன் எனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம்....

 
Published : Feb 23, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தீபக் தடாலடி .....! போயஸ் கார்டன் எனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம்....

சுருக்கம்

தீபக் தடாலடி .....! போயஸ் கார்டன் எனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம்....

தீபக்

மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவின்  அண்ணன்  மகன்  தீபக், ஒரு தனியார்  தொலைகாட்சிக்கு   தொலைபேசியின்  வாயிலாக  பல  திடுக்கிடும்  கருத்தை  வெளியிட்டார் .

பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து பேசிய   தீபக் , போயஸ்  கார்டனை  பற்றி தன் கருத்தை  முன் வைத்தார்.

ஜெயலிதாவின்  பிறந்த  நாள்

நாளை, மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்த நாள்  என்பதால்  அதிமுக கட்சியினரிடையே

பல  ஏற்பாடுகள்  செய்யப்பட்டு  வருகிறது. இந்நிலையில்,   போயஸ் கார்டன்  எனக்கும் , தீபாவுக்கும் தான்  சொந்தம் என, ஜெயலலிதாவின்  அண்ணன் மகன்  தீபக்  தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி,  உச்சநீதிமன்ற  தீர்ப்பின் படி,  1௦௦  கோடி  ரூபாய்  அபராத தொகையை ,தீபக்கே  தனி மனிதனாக  கட்ட  உள்ளதாகவும்  அதன் பின்,  போயஸ் கார்டன்  தனக்கும்  தீபாவுக்கும்  தான்  சொந்தம் என குறிபிட்டுள்ளார் .

பெங்களூரு  ஆக்ரஹாரா  சிறை

தீபக்கால்  அன்பாக சசிகலா ஆண்டி  என  அழைக்கப்படும் சசிகலா  தற்போது ,  பெங்களூரு  அக்ரஹாரா சிறையில்  உள்ள   இந்நேரத்தில் தீபக்  இவ்வாறு  கூறி  இருப்பது ,  அரசியல்   வட்டாரத்தில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது  

       

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு