தீபா பேனரை கிழித்த சசிகலா ஆதரவாளர்கள் – கொதித்தெழுந்த திருவண்ணாமலை எம்.பி...

 
Published : Feb 23, 2017, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தீபா பேனரை கிழித்த சசிகலா ஆதரவாளர்கள் – கொதித்தெழுந்த திருவண்ணாமலை எம்.பி...

சுருக்கம்

செங்கத்தில் ஓ.பி.எஸ், தீபா ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து அகற்றியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்புனர் வன ரோஜா தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் செங்கம்  துணை காவல்துறை கண்காணிப்பாளிடம்  புகார் மனு அளித்தனர்.

பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது அதிமுக.

இதில் ஓ.பி.எஸ்க்கு சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், முன்னாள் அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதில், திருவண்ணாமலை அதிமுக எம்.பியான வனரோஜா கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதனிடையே பொதுமக்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு எம்.எல்.ஏக்களை எம்.எல்.ஏக்களை வலியுறுத்தினர். ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்த எம்.பி வனரோஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்க்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவு தெரிவித்தார். பின்னர், ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்து எனது அரசியல் பயணம் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி ஓ.பி.எஸ்சும் தீபாவும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் நியாயம் கேட்க நாளை முதல் வாகன பேரணி செல்ல உள்ளனர்.

நாளை நடக்கவிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு தமது பயணத்தை தொடங்க உள்ளனர்.

இதையொட்டி செங்கத்தில் ஓ.பி.எஸ், தீபா ஆதாரவாளர்கள் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பேனர்கள் வைத்திருந்தனர். அதை சில சமூக விரோதிகள் கிழித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

எனவே திருவண்ணாமலை எம்.பி வனரோஜா தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பேனர்கள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துணை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு