அதிமுகவில் இணையும் பேபிம்மா... மாதுக்குட்டி டபுள் ஹேப்பி!! கலக்கத்தில் எதிர்கட்சிகள்...

Published : Jan 06, 2019, 07:30 PM IST
அதிமுகவில் இணையும் பேபிம்மா... மாதுக்குட்டி டபுள் ஹேப்பி!! கலக்கத்தில் எதிர்கட்சிகள்...

சுருக்கம்

தொண்டர்களின் விருப்பப்படி அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஜெ.தீபா மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார் .இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.திமுக தலைவர் கா.மாதவன் உடனிருந்தார். 

கடந்த சில தினங்களாக ஜெயலலிதாவின் அன்னான் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் உலாவந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தெரிவித்துள்ளார். 

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அதிமுகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய தீபா, “அதிமுக மிகப்பெரும் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவர்களது வாழ்க்கையை அர்ப்பணித்து கட்சியை வளர்த்தனர். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம்.

சசிகலா குடும்பத்தை தமிழக மக்கள் விரட்டி ஒதுக்கி வைத்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி கமிஷன் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டும். தொண்டர்களின் ஆதரவுடன் சிறு இயக்கத்தை நடத்தி வந்தேன். அதற்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி” என பேசினார். 

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். அதுகுறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்கவுள்ளோம். எனது தொண்டர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும்” எனக் கூறினார். இந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.திமுக தலைவர் கா.மாதவன் உடனிருந்தார். அதிமுகவில் விரைவில் ஜெ.தீபா இணைய இருப்பதால் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!