
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக பேனர்கள்….தமிழகம் முழுவதும் பரபரப்பு…
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக வின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.
ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெவின் தோழி சசிகலாதான் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதனிடையே ஜெவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிகப் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
திண்டிவனம், அரியலுர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.