அத்தைமடி மெத்தையடி… ஜெயலலிதா குறித்து கவிதை எழுதி உருகிய தீபா…

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 08:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
அத்தைமடி மெத்தையடி… ஜெயலலிதா குறித்து கவிதை எழுதி உருகிய தீபா…

சுருக்கம்

அத்தைமடி மெத்தையடி… ஜெயலலிதா குறித்து கவிதை எழுதி உருகிய தீபா…

ஜெயலலிதா மறைந்த பின் அவரது அண்ணன் மகள் அதிமுக விற்கு தலைமை ஏற்ப வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிமுக பொதுச் செயலாளர்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா படிக்காதவர் என்றும், தீபா நன்கு படித்தவர் என்றும், தீபாவை ஜெயலலிதாவே படிக்க வைத்தார் எனவே தீபா தான் கட்சிக்கு தலைமை தாங்க தகுதியானவர் என தொண்டர்கள் கருதுகின்றனர்.

தீபா என்ன படித்திருக்கிறார்? கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட தீபா குறித்து பார்க்கலாம்.

சென்னை எத்திராஜ் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர் தீபா.1998 ல் நிலா டிவி யில் பயிற்சி பத்திரிக்கையாளராக சேர்ந்தார்.பின்னர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இதழியல் முடித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக  பணியாற்றினார். பின்னர் லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஜர்னலிசம் படித்து INAS  என்ற சர்வதேச செய்தி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றினார். தற்போது WAR CRIMES AND HUMANITY CRIMES பிரிவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு,இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாக பேச,எழுத வரும்.இவையெல்லாம் போக தீபா ஒரு கவிஞர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இளவேனில் பூக்கள் என்ற கவிதைத் தொகுப்பை தீபா வெளியிட்டுள்ளார்.அதில் முதல் கவிதையிலேயே  ஜெயலலிதா குறித்து உருகியிருக்கிறார்.

 

‘சின்ன சின்ன ஞாபகங்கள்..

சின்னவள் என் சிந்தையிலே

அத்தை என்று உனை அழைக்க

அமுதுறும் என நாவினிலே

அன்புக் கரம் நீ பிடித்து

கொஞ்சிக் கொஞ்சி நீ பேசையிலே

வண்ண வண்ண பூங்காவில்

அத்தை மடி மெத்தையிலே

சின்னவள் நான் குறுப்பு செய்ய

புன்னகைத்தாயே மலர் போல..

என ஜெயலலிதா குறித்து உருக்கமாக கவிதை வடித்து அசத்தியுள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!