
“இரட்டை இலை சின்னத்தை மீட்பதே இலக்கு” – தீபா சரவெடி பேச்சு .......
ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடியாக பல கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கபட நாடகம்
தமிழகத்தில் ஆட்சியில் இருந்துக் கொண்டு கபல நாடகத்தை நடத்துபவரை நம்ப வேண்டாம் என்றும்,தன் அத்தையும் மறைந்த முதல்வருமான "அம்மாவின் ஆசியோடு" தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்று குறிபிட்டுள்ளார் தீபா .இன்று முதல் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியதாவும் குறிப்பிட்டார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே இலக்கு
தொடர்ந்து பேசிய தீபா, கட்சி சின்னத்தை பற்றை அதிரடியாக தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை கூறினார். அதாவது, “இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தன்னுடைய இலக்கு” எவும், தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலரும் என்றும் தீபா கூறினார்.
மிக விரைவில், அம்மாவின் ஆசியோடு, அவர் விட்டு சென்ற ஆட்சியை ,தொடர்ந்து செயல்படுத்திட என்னுடைய முழு பங்கும் இருக்கும் என உறுதியாக கூறினார். தீபாவின் இந்த அதிரடி பேச்சால், அதிமுக வட்டாரத்தில் ஒரு சசலப்பு நிலவுகிறது.