
தர்மயுத்தம் வரலாற்றில் வெற்றி அடையும்
ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஒ பி எஸ் , சென்னை ஆர். கே நகரில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.
அப்போது பேசிய , ஒ பி எஸ் , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேசினார்.மேலும், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள் என , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தொடர்ந்து புகழாரம் சூட்டினார்.
ஆட்சி :
அம்மா அவர்கள் கட்டிக்காத்து வந்த ஆட்சி இன்று யார் கையில் இருக்கிறது ? எந்த குடும்பத்தின் கையில் உள்ளது என கேள்வி எழுப்பினார் ? அம்மா இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா ? எனவும் பேசினார்
மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை அமைத்து தீர்வு காணும் வரை , தர்ம யுத்தம் தொடரும் தொடரும் என கூறி தன்னுடைய உரையை முடித்துகொண்டார் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்