
சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு பதிலளித்த தீபாவிடம் நீங்கள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு ஆவேசமடைந்த அவர் சூடாக பதிலளித்தார்.
33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்தார் , 43 ஆண்டுகள் இருந்தார் அதனால் முதலமைச்சர் என்பதெல்லாம் சொல்ல முடியாது அதை என்னை பொறுத்தவரை ஏற்றுகொள்ள முடியாது என்று பதிலளித்தார்.
தீபா இதுவரை தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளார் என்று ஒரு ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு கோபமான தீபா..
நான் எதுவும் செய்யவில்லை, ஆனால் நீங்கள் என்ன செய்தேன்? என்ன செய்யவில்லை என்பது குறித்தெல்லாம் ? கேள்வி கேட்பதற்கு நான் சொல்ல முடியாது.
நான் அந்த பணியை நிறைவேற்றத்தான் இறங்கியுள்ளேன். நான் செயல்படும்போது தெரிந்துகொள்ளுங்கள் .