
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் நேரில் சென்று தீபாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேரம் வரும்போது நல்ல முடிவை நான் அறிவிப்பேன் என தீபா கூறி வந்த நிலையில் நேற்று எம்.ஜி.ஆர் பணியை இன்று முதல் தொடர உள்ளதாகவும், தொண்டர்களின் எதிர்பார்ப்பு போல் என் பொதுவாழ்வு அமையும், உங்களுக்காக நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.
இளம் புரட்சித்தலைவி தீபா பேரவை, ஜெ.தீபா பாசறை என தமிழகம் முழுவதும தொடங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் தனது முடிவை அறிவிப்பதாக தீபா அறிவித்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன் திரண்டனர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவர் மக்களும் இளைஞர்களும் நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறார்கள்.
மக்கள் கருத்துகளையும், தொண்டர்களின் கருத்துகளையும் சேகரித்து விட்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் பிப்ரவரி 24ம் தேதியன்று தமது அரசியல் பயணம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிடுவேன் என அறிவித்தார்.
இந்நிலையில் ஜெ.தீபா பாசறை மாநில ஒருங்கினைப்பாளர் போராசிரியர் இரா.வெற்றிச்செல்வி இன்று சென்னை அய்யப்பன்தாங்கலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது கடந்த 4ம் தேதி ஜெ.தீபா பாசறை சென்னையில் தொடங்கப்பட்டது.மாநிலம் முழுவதும் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இன்று வரை 7 லட்சம் பேர் உறுப்பினர்கள் கையெழுத்துயிட்டு
தங்களை இணைத்து உள்ளனர்.மாவட்டம் தோறும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசிவாகிகள் தங்கள் கிளை கழகத்தை கலைத்து விட்டு தீபா பாசறையில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர்.பிப்ரவரி 24ம் தேதி அரசியல் பயணம் குறித்து வெளியிடுவதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
வருகிற இடைத்தேர்தலில் சேவல் சின்னத்தில் முதன் முதலில் பெற்றி பெற்றது போல் ஜெ.தீபா அதே சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தனிச்செயலர் (ஓய்வு) கவிஞர்.இளந்தேவன் சந்தித்து ஆதரவு கேட்டோம் தனது ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.