ச்சீட்டிங் பண்ணுச்சா பேபிம்மா? மாதுக்குட்டியுமா!! தன் கட்சியினரிடமே ஆட்டையை போட்டு கட்சியையே கலைத்த ஒரே தலைவி!!

By sathish kFirst Published Aug 8, 2019, 6:14 PM IST
Highlights

உலக அரசியல் வரலாற்றிலேயே தன் கட்சியினரை பார்த்துக் கதறிக் கண்ணீர்வடித்து கொண்டு, கட்சியையே கலைத்த ஒரே தலைவி எனும் பெயரை அடித்து நொறுக்கி அள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான பேபிம்மா என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் தீபா. 

இவிங்க தொண்டர்களா இல்ல குண்டர்களாடா? என்னை நிம்மதியா தூங்க கூட விடமாட்டீங்களா? என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழ விடுங்கடா. புள்ளை குட்டி பெத்துக்கிட்டு குடும்பத்தை கவனிக்கணும். என்று உலக அரசியல் வரலாற்றிலேயே தன் கட்சியினரை பார்த்துக் கதறிக் கண்ணீர்வடித்து கொண்டு, கட்சியையே கலைத்த ஒரே தலைவி எனும் பெயரை அடித்து நொறுக்கி அள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான பேபிம்மா என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் தீபா. 

அவர் அள்ளிச் சென்றது பெயரை மட்டுமல்ல, எங்களின் துட்டையும் சேர்த்துத் தான்’ என்கின்றனர் அவரது தீபா பேரவையில் நிர்வாகிகளாக இருந்தவர்கள். ஆமாம் கட்சிக்காரர்களிடம் பல லட்சங்களை ஆட்டையப் போட்டுவிட்டாராம் பேபிம்மா. அது பற்றி அவர்கள் கணக்கு கேட்டும்,  அதை அவர்கள் தொடர்ந்து திருப்பிக் கேட்டும் குடைச்சல் கொடுக்கவும்தான் இப்படி பேரவையை கலைக்கிறேன் என்று வாட்ஸாப்பில் பிரஸ் ரிலீஸ் பண்ணி எகிறி குதித்து எஸ்கேப் ஆகிறார்! என்று தகவல்கள் வருகின்றன. 

இது பற்றி மேலும் விசாரித்தால்...ஒரு உறுப்பினர் அட்டைக்கு முப்பது ரூபாய் வீதம் அறுபது மாவட்ட செயலாளர்களிடமிருந்து தலா பத்தாயிரம் உறுப்பினர் அட்டைகளுக்கு பணம் பெற்றார். அப்படிப் பார்த்தால் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் உறுப்பினர் அட்டைக்கான பணம் வடிவில் தீபாவிடம் சென்றது. 

மாநில அளவில் பொறுப்பு தர்றேன்னு சொல்லி ஈ.சி.ஆர். ராமச்சந்திரன் அப்படிங்கிறவர்ட்ட இருந்து 80 லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டு ஏமாத்திட்டார்ன்னு ஒரு தகவல். திருப்பூர் மாசெ. செந்தில்குமார், கோயமுத்தூர் மாசெ. ஜெயராமன்னு தீபாவுக்கு எதிராக பணப் பஞ்சாயத்தை கூட்டியவர்களின் எண்ணிக்கை நீளுது.

நான் கட்சியை கலைச்சுட்டேன். இனி என்னை தொந்தரவு பண்ணாதீங்க!ன்னு வாட்ஸ்அப்பில் தீபா சொல்லிட்டதாலே மட்டும் அவர் எஸ்கேப் ஆகிட முடியாது. கட்சியின் வளர்ச்சிங்கிற பெயரிலும், கடனாகவும் பணத்தை வாங்கிட்டு சொந்த விஷயத்துக்கு ஜாலியா செலவு பண்ணிட்டு, இப்ப கட்சியையே கலச்ச தீபாவை சும்மா விடமாட்டோம். இது மிகப்பெரிய சீட்டிங். அவர் மேலே பண மோசடி புகாரை போலீஸ்ல கொடுத்து, எடப்பாடியார் கைகாலில் விழுந்தாவது தீபாவை உள்ளே தள்ளுவோம். கூடவே அந்த மாதவனும் போவார். என்று கொதிக்கிறார்கள். 

கட்சியினரிடம் நீங்கள் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் வருதே? என்று தீபா, மாதவனிடம் விளக்கம் கேட்க போன் செய்து கொண்டே இருந்தோம். ஆனால் ரிங் மட்டும் ஆகிறது, அபா பாருங்க தலைவி நோ ரெஸ்பான்ஸ். 

click me!