
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் , பரிசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தற்போது நடைபெற்று வரும் ஆட்சி ஊழல் மிகுந்தது என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்..இந்த ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
வாக்களிப்பதற்கு பணம் வாங்கக்கூடாது, பணம் கொடுக்கக்கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் தீபா தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மை என்பதை கண்டறிந்து தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கை என்றும் தீபா கூறினார்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான பின்னணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்ட தீபா, இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.