
அந்நிய செலாவணி வழக்கில் நாளை முதல் வாதம் நடைபெறும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அந்நிய செலாவணி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் சார்பில் கடந்த 24 ஆம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தினகரனின் மனுவை தள்ளுபடி செய்து, வாதத்தை நாள்தோறும் நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தினகரின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மேலும் இவ்வழக்கில் நாளை முதல் வாதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அந்நிய செலாவணி வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது தினகரனுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்....