மீண்டும் தொடங்கியது இரட்டை இலை விவாதம் - திக் திக் நிமிடங்கள்..!!

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 03:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
மீண்டும் தொடங்கியது இரட்டை இலை விவாதம் - திக் திக் நிமிடங்கள்..!!

சுருக்கம்

debate on admk symbol in election commission

அதிமுகவில் பிளவு இல்லை எனவும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க சட்டப்படி தடை ஏதும் விதிக்கவில்லை எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் தேர்தல் ஆணையம் முன் வாதிட்டு வருகிறார்.

அதிமுகவில் இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து முடிவை மேற்கொள்ள சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் இன்று நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று ஒ.பி.எஸ் தரப்பும் சசிகலா தரப்பு அவர்களது வழக்கறிஞர்களுடன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகினர்.

ஒ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதிட்டனர். அப்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே தேர்வு செய்யபட்டார் எனவும், எனவே அவர் எடுத்த முடிவுகள் எதுவும் செல்லாது எனவும் தெரிவித்தனர்.

சசிகலா ஒரு ஊழல் குற்றவாளி எனவும், அவரால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என இருக்கும்போது, அவரால் எப்படி வேட்பாளரை நியமிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தற்போது சசிகலா தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. சசிகலா தரப்பில், வழக்கறிஞர் அதிமுகவில் பிளவு இல்லை எனவும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க சட்டப்படி தடை விதிக்கவில்லை எனவும், வாதிட்டு வருகின்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

இலையை கைப்பற்ற போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

PREV
click me!

Recommended Stories

பதவியேற்ற முதல் நாளே ராஜினாமா செய்த விஜய்..! திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத் தேர்தல்..
விஜய் செய்தது ஏத்துக்கவே முடியாத குற்றம்.! முதல் நாளே முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்.!