கொரோனாவுக்கு மரண ஊசி ரெடி..., செப்டம்பர் மாததிற்குள் உலகத்துகே கொடுப்போம்..,இந்தியா பெருமிதம்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 28, 2020, 8:44 PM IST
Highlights

எப்பதான் கிடைக்கும் கொரோனா தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிப்பாங்க எங்க உசுரு இருக்குமா இருக்காதானு தெரியலையே என்று புலம்பும் மக்களுக்கு வயிற்றில் பாலைவாறுத்திருக்கிறது தடுப்பு ஊசி தயாரிக்கும் நிறுவனம்.
செப்டம்பர் மாத இறுதியிக்குள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி இருக்கிறார்.

T.Balamurukan

எப்பதான் கண்டுபிடிப்பாங்க கொரோனாவுக்கு தடுப்பு ஊசி மருந்து, அதுவரைக்கும் எங்க உசுரு இருக்குமா, இருக்காதானு தெரியலையே என்று புலம்பும் மக்களுக்கு வயிற்றில் பாலைவாறுத்திருக்கிறது தடுப்பு ஊசி தயாரிக்கும் நிறுவனம்.செப்டம்பர் மாத இறுதியிக்குள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி இருக்கிறார். இதன் விலை எல்லாமக்களும் எளிதில் பணம் செலுத்தி வாங்க கூடிய அளவிலேயே சுமார் ரூ .1,000 இருக்கும் என்கிறார்கள். 


உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. இந்த நிறுவனம் புனே வில் இயங்கி வருகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா இந்த தடுப்பூசி குறித்து விளக்கமளித்தார்.

"மே மாத இறுதிக்குள் நாங்கள் உற்பத்தியைத் தொடங்கி விடுவோம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் உற்பத்தி முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்துக்கும் கொடுக்கக்கூடிய ஒரு தயாரிப்பு எங்களிடம் இருக்கும்.பெரும்பாலான விஞ்ஞானிகள் இரண்டு வருடங்கள் அல்லது குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு முன்னர் ஒரு தடுப்பூசி சந்தையில் எதிர்பார்க்க முடியாது என கூறி உள்ளார்களே நீங்கள் எப்படி குறுகிய கால அவகாசத்தில் தடுப்பூசி கிடைக்கும் என கூறுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்..,

பூனவல்லா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் கூட்டணி வைக்கும் வரை நீண்ட காலம் எடுக்கும் என கருதினோம்.தடுப்பூசி உற்பத்திக்கு  "கோடஜெனிக்ஸ்" மற்றும் பிற அமெரிக்க கூட்டாளர்களுடன் இருந்த போது 2021 வரை காலம் எடுக்கும் என்று நாங்கள் கூறியுள்ளோம்,அதற்கிடையில்  என்ன நடந்தது என்றால் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்தோம். இது நிறைய முன்னேற்றம் அளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு அணி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது "எபோலா" வைரஸ்க்கு தடுப்பூசி கொண்டு வருவதில் வெற்றி பெற்றது. மலேரியா தடுப்பூசிக்கு எங்கள் நிறுவனம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.ஆக்ஸ்போர்டைத் தவிர,எனது நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸ்டனும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அதன் தடுப்பூசியை உருவாக்க ஒரு நேரடி அட்டென்யூட்டட் வைரஸைப் பயன்படுத்துகிறது. அதனுடன் விலங்கு சோதனைகளை நடத்தி வருகிறது. ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். இது குறித்த ஒரு துல்லியமான புள்ளிவிவரம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறினார்.

click me!