யாருக்கு சாவுமணி.. வேலுமணிக்கா..?? அளந்துபேசு உதயநிதி.. பயங்கரமாய் கொந்தளித்த கல்யாண சுந்தரம்.

Published : Feb 18, 2022, 02:18 PM IST
யாருக்கு சாவுமணி.. வேலுமணிக்கா..?? அளந்துபேசு உதயநிதி.. பயங்கரமாய் கொந்தளித்த கல்யாண சுந்தரம்.

சுருக்கம்

தனக்கு நேர் எதிராக நிற்கிற ஒரு அரசியல் தலைவரை பார்த்து அந்த தலைவரை கொலை செய்து விடுவோம் என்கிற தொனியில் சாவு மணி அடிப்போம் என்ற வார்த்தையை எவரும் பயன்படுத்தியது கிடையாது. 

கோவையில் திமுக வெற்றி பெறாது என்பதை தெரிந்துகொண்ட உதயநிதி வேலுமணிக்கு சாவுமணி  அடிப்பேன் என அநாகரிகமாக பேசியிருக்கிறார் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் விமர்சித்துள்ளார். இது உதயநிதியின் குடும்பத்திற்கு ஒன்றும் புதிது அல்ல பலகாலமாக சாவு மணி அடித்த பரம்பரை தான் உதயநிதி பரம்பரை என்றும் கல்யாணசுந்தரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது,  இந்நிலையிங் அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பார்ப்புரை மேற்கொண்ட அவர், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலே போதுமானது, கூட்டம் திரண்டிருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் கோவை மக்களை நம்பவே மாட்டேன், வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என சொல்றீங்க செஞ்சீங்களா என கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்றபோதும் கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க எனக்கூறினார். ஆனாலும் தமிழக முதல்வர் சொன்னதை செய்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சிம்மசொப்பனமாக ஸ்டாலின் விளக்குகிறார். இந்த முறை உங்களை நம்பலாமா? என்ற அவர், ஊழல் மணிக்கு சாவு மணி அடிப்பது நிச்சயம், ஏற்கனவே எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் முடக்கியுள்ளோம் என பேசினார். அவரின் இந்த பேச்சு அதிமுகவினரை கொந்தளிப்பை வைத்துள்ளது. அதிமுக தலைவர்கள் பலரும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையின் போது மாண்புமிகு முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சாவு மணி என தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார்.

எனவே அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் சமிபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் தவப்புதல்வன் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரத்தின் போது தற்குறி போல பேசியிருக்கிறார். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவுக்கு அந்த நாகரீகம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் அதை கடைப்பிடித்து வருகின்றன. எப்போதும் அரசியலில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் திமுகவின் இன்றைய தலைமுறை உதயநிதி ஸ்டாலின் மிக கேவலமாக நடந்து கொள்கிற காட்சிகளை பார்க்க முடிகிறது. அதாவது தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் சாவு மணி அடிப்போம் என்று கூறினால் ஒரு கொள்கைக்கு தான் அப்படி சொல்வார்கள். 

இந்த  கொள்கைக்கு சாவு மணி அடிப்போம், அந்த கட்சியின் சித்தாந்தத்திற்கு சாவு மணி அடிப்போம் என்றுதான் பேசுவார்கள், இந்த ஆட்சியிலே இருக்கின்ற தீமைகளுக்கு சாவு மணி அடிப்போம் என்றுதான் பேசுவார்கள், ஆனால் தனக்கு நேர் எதிராக நிற்கிற ஒரு அரசியல் தலைவரை பார்த்து அந்த தலைவரை கொலை செய்து விடுவோம் என்கிற தொனியில் சாவு மணி அடிப்போம் என்ற வார்த்தையை எவரும் பயன்படுத்தியது கிடையாது. நாகரீகம் உள்ள, அறிவுள்ள, குறைந்தபட்ச மனிதத்தன்மை உள்ள எவரும் அப்படி பேச மாட்டார்கள். ஆனால் இன்று கொங்கு மண்டலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், ஒரு கலவரத்தை பதற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தனது பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். 

ஒருமுன்னால் அமைச்சரை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கொறடாவை, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிற சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி அவர்களைப் பார்த்து சாவு மணி அடிப்போம் என்று கூறுகிறார் உதயநிதி. இப்படி பேசுவதை அவரது குடும்பத்திற்கு புதியது அல்ல அவர்கள், பரம்பரை சாவுமணி  அடித்த பரம்பரை தான் என கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாவடக்கத்துடன் பேசவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!