பாஜக வலையில் தானா வந்து சிக்கிய தயாநிதி மாறன்...!!அடுத்த ரெய்டுக்கு தயாராகும் இன்கம்டாக்ஸ்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 11, 2020, 1:11 PM IST
Highlights

இனி எல்லாவற்றையும் விற்றுவிட்டீர்கள். ஏன் நாடாளுமன்றத்தையும் விற்றுவிட  
வேண்டியதுதானே? திருமணங்களுக்காக வாடகைக்கு விட வேண்டியதுதானே?,என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.வருமான வரித்துறை பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ரஜினிக்கு விலக்கு.விஜய்க்கு ரெய்டு ,சம்மன் இது என்ன நியாயம். என்று பேசியிருப்பது பாஜக வை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. 

 by.TBalamurukan
இந்திய பட்ஜெட் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று  வருகின்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்..," பட்ஜெட் மசாலா  தோசை,எல்.ஐ.சி பங்குகள்,ஏர் இந்தியா விற்பனை,நடிகர்கள் விஜய்,ரஜினி என  அனைத்தையும் பற்றி பேசி ,பாஜக விடம் தானாக வந்து சிக்கியிருக்கிறார்.

இந்திய பட்ஜெட் கூட்டத் தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து  பேசிய தயாநிதி மாறன், "வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது.  யாரும் ஆடிட்டரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஆனால், இந்த புதிய வரி விதிப்பு குறித்து புரிந்து  கொள்ளவே நான் ஆடிட்டருக்கு அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

பட்ஜெட்க்கு முன்பு மசாலா தோசை ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த புதிய வரி  விதிப்புக்கு பின்பு மசாலா தோசை விலை நாற்பத்தைந்து ரூபாய்தான். ஆனால், சாம்பாருக்கு ரூ15  சட்னிக்கு ரூ 15  செலுத்த வேண்டும். இப்படிதான் இருக்கிறது உங்கள்  வரிவிதிப்பு.இந்திய மக்கள் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால், சேமிப்பு பழக்கத்தை சிதைப்பது போல இருக்கிறது உங்கள் பட்ஜெட். சேமிப்புக்கான வட்டி  விகிதத்தை குறைத்து இருக்கிறீர்கள்.மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்தாமல்,  அதனை நீங்கள் முடக்கி வருகிறீர்கள்.எல்.ஐ.சி பங்குகளை விற்பது, ஏர் இந்தியாவை  விற்பது, பி.எஸ்.என்.எல் நஷ்டம் ஆகிய விஷயங்களில் ஆளும் பா.ஜ,க அரசை  கடுமையாக குற்றம் சாட்டினார் தயாநிதி மாறன்.

இனி எல்லாவற்றையும் விற்றுவிட்டீர்கள். ஏன் நாடாளுமன்றத்தையும் விற்றுவிட  வேண்டியதுதானே? திருமணங்களுக்காக வாடகைக்கு விட வேண்டியதுதானே?,என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.வருமான வரித்துறை பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ரஜினிக்கு விலக்கு.விஜய்க்கு ரெய்டு ,சம்மன் இது என்ன நியாயம். என்று பேசியிருப்பது பாஜக வை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தயாநிதி மாறன் இந்த அளவிற்கு பேசுகிறாரே.! அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தினால் எவ்வளவு மோசடி நடந்திருக்கிறது என்று தெரிந்து போகும் தானே. தயாநிதி,கலாநிதி மாறன் நடத்தும் நிறுவனங்களை மோப்பம் பிடிக்க தயாராகி வருகிறது வருமானவரி துறை.  


 

click me!