விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!! அதிரடியாக சலூகை அறிவித்த முதலமைச்சர்...!!

Published : Feb 11, 2020, 12:41 PM IST
விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!!  அதிரடியாக சலூகை அறிவித்த முதலமைச்சர்...!!

சுருக்கம்

விவசாயத்திற்கு என 8,353.58 கோடியை மானியமாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ஆந்திராவில் கிழக்கு  மின் வினியோகம் மற்றும் தெற்குமின் விநியோகம்  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு2020- 2021 ஆம் ஆண்டு  ரூபாய்  14,349.07  கோடி நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மின் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு ஒன்பது மணி நேரம் மின்சாரம் இலவசம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  இது அம் மாநில விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி ,  பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் தங்களுக்கு இப்படி ஒரு முதலமைச்சர் கிடைக்கவில்லையே என மற்ற மாநில மக்கள் ஏங்கும் அளவிற்கு ஜெகன் மோகன் சலுகைகளை அறிவித்து நல்லாட்சி புரிந்துவருகிறார் . 

இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக சுமார் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக்கூடிய வர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு  95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது விவசாயத்திற்கு  9 மணிநேரம்  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில்  செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர்   சி.வி.வி நாகராஜூனா  , 500 யூனிட்டுக்கு மேல்  மின்சாரம்  உபயோகிப்பவர்களுக்கு ஒரு  யூனிட்டிற்கு இதுவரை 9. 0.5 பைசா கட்டணம் வசூளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு யூனிட்டுக்கு  90 பைசா  உயர்த்தப்பட்டு 9.95 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்   

விவசாயத்திற்கு என 8,353.58 கோடியை மானியமாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ஆந்திராவில் கிழக்கு  மின் வினியோகம் மற்றும் தெற்குமின் விநியோகம்  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு2020- 2021 ஆம் ஆண்டு  ரூபாய்  14,349.07  கோடி நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.   இம்முறை விவசாயத்திற்கான  மின் விநியோகத்திற்கு சரியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது அரசின் கொள்கைப்படி விவசாயத்திற்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் .   இந்நிலையில் மானியங்களை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான வழிகளை ஆலோசித்து வருகிறது,  இதில் நிறை குறைகள் இருந்தால் அதை அடுத்த ஆண்டில் உடனே அது சரி செய்வோம் என அவர் கூறினார்.  
 

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு