‘அந்தர் பல்டிடா’ சாமி... இப்படியும்பேசியிருக்கிறாரு பாருங்க? ‘சுஷ்மாவை கலாய்த்த’ காங்கிரஸ்...

Asianet News Tamil  
Published : Jun 26, 2017, 08:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
‘அந்தர் பல்டிடா’ சாமி... இப்படியும்பேசியிருக்கிறாரு பாருங்க? ‘சுஷ்மாவை கலாய்த்த’ காங்கிரஸ்...

சுருக்கம்

Day after Sushma attacks Meira Kumar with a 2013 video Congress takes Swaraj down memory lane

காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார், மக்களவை சபாநாயகராக இருந்தபோது, தன்னையும், எதிர்க்கட்சிகளையும் பேசவிடாமல் எப்படி நடத்தினார் என்று தெரியுமா? என்று சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வௌியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சி, நேற்று ஒரு வீடியோவைவெளியிட்டுள்ளது. அதில், சபாநாயகர் மீராகுமாரை கண்டபடி புகழ்ந்து சுஷ்மா சுவராஜ்நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அது நாடாளுமன்ற குறிப்பிலும் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமான வீடியோவெளியிட்ட சுஷ்மா, அதே நாடாளுமன்றத்தில் அவரை புகழ்ந்து, நான் உங்கள் ரசிகை என்று பேசியுள்ளார்.

6 நிமிட வீடியோ

பா.ஜனதா கட்சியின் ‘யூ- டியூப்பில்’ மத்திய அமைச்சர் சுஷ்மா நேற்று முன் தினம் ஒரு 6 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வௌியிட்டார். அதில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நான் பேச முற்பட்டபோதெல்லாம் என்னை, பேசவிடாமல் சபாநாயகர்மீராகுமார், ‘நன்றி, அமருங்கள்’ என்று கூறி இடைமறிப்பார். ஏறக்குறை 6 நிமிடங்களில் 60 முறை இவ்வாறு தடை செய்தார். இப்படித்தான் மீரா குமார் எதிர்க்கட்சிகளை நடத்தினார். இவரா நடுநிலையுடன் செயல்படுவார்?  என்று சுஷ்மா அந்த டுவிட்டரில்கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

பதிலடி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஒரு வீடியோ வௌியிடப்பட்டது. அதில், 2014ம் ஆண்டு மீராகுமார், தனது பதவி முடிந்து வௌியேரும் போது, அவருக்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடந்தது.

உங்கள் ரசிகை நான்

அதில் பேசிய சுஷ்மா சுவராஜ், “ நான் அனைவரும் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திக்க வேண்டும். நான் உங்கள் ரசிகை. உங்களின் கோபப்படாத தன்மையும், அவையை முறையாக நடத்தியதும், உங்களின் குணமும் என்னை ஈர்த்தது’’ எனத் தெரிவித்தார். இந்த வீடியோ அடங்கி காட்சியை காங்கிரஸ் கட்சி வௌியிட்டு சுஷ்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!