அப்பாடா பெரிய பாரம் குறைஞ்சிடுச்சு.. கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதை வரவேற்கும் சி.வி.சண்முகம்?

Published : Feb 02, 2022, 01:18 PM IST
அப்பாடா பெரிய பாரம் குறைஞ்சிடுச்சு.. கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதை வரவேற்கும்  சி.வி.சண்முகம்?

சுருக்கம்

கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் இருந்த குழப்பம் விலகியுள்ளது. அதிமுக யாரை நம்பியும் இல்லை. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் திட்டம் போட்டு செயல்பட வேண்டும். திமுகவினர் கூட்டணி பலமில்லாமல் வெற்றி பெற முடியாது. ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமலே வெற்றி பெறும். திமுகவின் நிர்வாக செயல்பாடு, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதால் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் இருந்த குழப்பம் விலகியுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதான கட்சிகளாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலையொட்டி ஒன்றிய அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்;- அதிமுகவிற்கு அனைத்து மதமும் சம்மதம். பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் நமக்கு இருந்த பாரம் குறைந்து விட்டது.

அவர்கள் விலகியதால் நஷ்டம் கிடையாது. கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் இருந்த குழப்பம் விலகியுள்ளது. அதிமுக யாரை நம்பியும் இல்லை. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் திட்டம் போட்டு செயல்பட வேண்டும். திமுகவினர் கூட்டணி பலமில்லாமல் வெற்றி பெற முடியாது. ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமலே வெற்றி பெறும். திமுகவின் நிர்வாக செயல்பாடு, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும் என்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே  சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வி அடைந்தததாக சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் நமக்கு இருந்த பாரம் குறைந்து விட்டது என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!