வெளிநாட்டு சதிகளின் தூண்டுதல் இது... விஜய் மேல எங்களுக்கு சந்தேகமா இருக்கு... சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் போட்ட பாம்

By sathish kFirst Published Nov 9, 2018, 4:24 PM IST
Highlights

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்;  சினிமா என்ற போர்வையிலே, நடிக்கிறேன் என்ற போர்வையிலே இன்று அந்த திரைப்படத்தில் அரசின் திட்டத்தின் பொருட்களை விமர்சனம் செய்து, அதை எரிப்பது போன்ற காட்சியை காட்டி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்ற ஒரு தீவிரவாதியை போன்ற செயலை இன்று செய்திருக்கின்றார். 

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அரசின் நல திட்டங்கள், மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   திரையிடப்பட்ட திரையரங்குகளில்  பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள்  தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தணிக்கை துறையிடம் முறையாகச் சான்றிதழ் பெற்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், தடை கேட்பதும், திரையரங்குகளில் பேனர்களை கிழிப்பதும் திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று படக்குழு படத்தின் காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்துள்ளது.   

இந்நிலையில் இது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்;  சினிமா என்ற போர்வையிலே, நடிக்கிறேன் என்ற போர்வையிலே இன்று அந்த திரைப்படத்தில் அரசின் திட்டத்தின் பொருட்களை விமர்சனம் செய்து, அதை எரிப்பது போன்ற காட்சியை காட்டி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்ற ஒரு தீவிரவாதியை போன்ற செயலை இன்று செய்திருக்கின்றார். 

அந்த படத்தின் தயாரிப்பாளரும் சரி, அந்த படத்தில் நடித்துள்ள, உத்தமனை போன்று நடித்துக் கொண்டிருக்கிற, சினிமாவிலும் மக்களிடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிற நடிகரும் சரி, அந்த படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளும் சரி, இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் இதை அரசிடம் கண்டிப்பாக வலியுறுத்துவேன். தமிழகத்தில் வன்முறையை தூண்டி, ஜனநாயக முறையிலே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு அரசை தூக்கி எறிவதற்கு எப்படி தீவிரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகள் மறைமுகமாக போராடிக் கொண்டிருக்கின்றதோ, அதே செயலை, அதே பணியை இன்றைக்கு திரைப்படம் மூலமாக ஒரு நடிகர் செய்துள்ளார்.  

மேலும் பேசிய அவர், வெளிநாட்டு சதிகளின் தூண்டுதலின் பெயரிலே இன்றைக்கு தமிழகத்தில் கொண்டு வருகின்ற வளர்ச்சித் திட்டங்களை எல்லாம், தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவிலும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக் கூடாது, எந்த திட்டமும் நடைபெறக் கூடாது என்று ஒரு சதிக் கூட்டம் இந்தியாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சில காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜய் அவர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்கிறார்.

click me!