ஊரடங்கு சிகப்பு,ஆரஞ்சு,பச்சை மண்டலங்களில் எது செயல்படும்,செயல்படாது.!! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published May 1, 2020, 9:08 PM IST
Highlights

மே 3ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வர இருந்த நிலையில், மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பச்சை, ஆரஞ்சு மண்டல பகுதிகளில்  சில தடைகள தளர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

 T.Balamurukan

மே 3ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வர இருந்த நிலையில், மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பச்சை, ஆரஞ்சு மண்டல பகுதிகளில்  சில தடைகள தளர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 நாடு முழுவதும் சிவப்பு மண்டலமாக 130, ஆரஞ்சு மண்டலமாக 284, பச்சை மண்டலமாக 119 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சகம் பச்சைமண்டலங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. 
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நீடிக்கும். பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதிமக்கள் அதிகமாக  கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது. சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லைசிவப்பு மண்டலங்களில் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத் தடை. சிவப்பு மண்டலங்களில் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்.


ஆரஞ்சு மண்டலங்களில்  ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.  மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அடுத்த 21 நாள்களுக்கு இயங்காது. பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.  பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி.மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

 முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை
 சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33%பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.சிவப்பு மண்டலத்தில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.

click me!