கொரோனா பரவல் அதிகரிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகம்... அந்த 11 மாவட்டங்கள் எவை..?

By Thiraviaraj RMFirst Published Jun 5, 2021, 11:07 AM IST
Highlights

கோயம்புத்தூர், கரூர் உட்பட 11 மாவட்டங்களில், காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் காலை 6 முதல் மாலை 5 வரை இயங்கலாம்.

தமிழகத்தில் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் 14ம்  தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.  வாடகைகார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செயல்பட அனுமதி.  மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்

இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர்ர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் திடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவச்ய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்  மேலும் 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், கரூர் உட்பட 11 மாவட்டங்களில், காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் காலை 6 முதல் மாலை 5 வரை இயங்கலாம்.

மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் திறக்க அனுமதி இந்த மாவட்டங்களில் அனுமதி இல்லை. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள். 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. ஏற்றுமதி ஆணை வைத்திருப்பின், 10% பணியாளர்களுடன் செயல்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி.நடமாடும் காய்கறி, பழ, மளிகை விற்பனை தொடரும். நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை தொடர்ந்து செயல்படும்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!