தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு..?

Published : May 27, 2021, 04:32 PM IST
தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு..?

சுருக்கம்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு தொடரும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சுகன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்த வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு தொடரும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!