தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிப்பு... முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

Published : Mar 26, 2020, 06:15 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிப்பு... முதல்வர் எடப்பாடி  அறிவிப்பு..!

சுருக்கம்

முதல்வர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்  கூறுகையில்;- மளிகைக் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து,  கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. 

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்  கூறுகையில்;- மளிகைக் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உபேர் ஸ்விக்கி, உள்ளிட்ட ஆன் லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது. ஊரடங்கால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாததால் பண வசூலை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.  சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் விசாலமான இடங்களில் கடைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறி பழ வகைகளை விற்கும் போது 3 அடி தூரம் மக்களிடையே இடைவெளி இருக்க வேண்டும்.  தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!