ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..? அச்சடிக்கப்பட்ட அரசாங்க பாஸால் தமிழக மக்கள் அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Apr 27, 2020, 10:48 AM IST
Highlights

காய்கறி, மளிகை நடமாடும் கடைகளுக்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி வழங்கிய பாஸில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்கிற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

காய்கறி, மளிகை நடமாடும் கடைகளுக்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி வழங்கிய பாஸில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்கிற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் வீடியோ கான்பரஸ் மூலம் பங்கேற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று முதல் 29ம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல் 28ம் தேதி வரையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத பட்சத்தில் மேலும், சென்னையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு சார்பில் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தற்போது தமிழகத்திலேயே 4ல் ஒரு பங்கு பாதிப்பு சென்னையில் மட்டும் தான் உள்ளது. எனவே, சென்னையில் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக சென்னையை மாற்ற வேண்டும் என்றால் வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை.

சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. எனவேதான் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பணியான காய்கறி, மளிகை நடமாடும் கடைகளுக்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி வழங்கிய பாஸில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்கிற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

click me!