அதிமுக- பாமகவை அலற வைக்கும் ஐயப்பன்... கடலூரில் கலக்கம்!

Published : Apr 10, 2019, 06:03 PM IST
அதிமுக- பாமகவை அலற வைக்கும் ஐயப்பன்... கடலூரில் கலக்கம்!

சுருக்கம்

கடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். 

கடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். அய்யப்பன் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ., அய்யப்பன். 2011ல் அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அங்கிருந்து அதிமுகவுக்குத் தாவினார். அங்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ல் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பத் தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். இவரது வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர்தான் அய்யப்பன். 

தன்னை அமைச்சர் சம்பத் கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தில் இருந்து வந்த அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் சேர முயற்சித்து வந்தார். இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. 

சோதனை மேற்கொண்டு ஆளும்கட்சி இடஞ்சல் தருவதாக அய்யப்பன் கூறி வந்தார். ரெய்டு நடத்திய அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கோபத்தில் இருந்த அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் திமுகவில் இணைய இருந்த நிலையில் கட்சியில் இருந்தும் இன்று நீக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கான அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளனர். இவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அதிமுகவுக்கும், பாமக வேட்பாளர் கோவிந்தசாமிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கலக்கத்தில் பாமக உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!