பெண் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் விமர்சனம்... 67 நாட்களுக்கு பிறகு கிஷோர் கே.சுவாமி கைது..!

By Thiraviaraj RMFirst Published Oct 1, 2019, 1:20 PM IST
Highlights

சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை அவதூறாக பதிவிட்ட பிரபல சமூகதளவாசி கிஷோர் கே.சுவாமி மத்திய குற்றப்பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

கிஷோர் கே.சுவாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு பெண்கள் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்  விஸ்வநாதத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘’ட்விட்டர், சமூகவளைதளங்களில் @sansbarrier என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் கிஷோர் கே.சுவாமி என்ற நபர் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பதிவிட்டு வருகிரார். குறிப்பாக பெண் பத்திரிக்கையாளர்கள் மிகவும் கண்ணியக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் தொடர்ந்து பேசி வருகிறார்

குறிப்பாக காவிரி தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக பணியாற்றி வரும் கனிமொழி என்ற பத்திரிக்கையாளர் குறித்து கண்ணியக்குறைவாக விமர்சிக்கும் வகையில் அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூண்டி விடும் வகையிலும் பேசியுள்ளார். 

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் ‘’ பணியில் உறைந்த மலர் கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்று உதயமான நிதியை அடைய முயற்சிப்பது மிகப்பெரிய சவால்தான்.. என்றாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’’ என்றுதற்போது கலைஞர் தொலைக்காட்சியில் இணை ஆசிரியராக பணியில் இருக்கும் பத்திரிக்கையாளர் பனிமலர் குறித்து கீழ்த்தரமாக பதிவிட்டுள்ளார்.

 

அதேபோல் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் பணியாற்றும் ஹேமா என்ற பத்திரிக்கையாளர் குறித்து கிஷோர் கே.சுவாமி ‘’ஹேமா என்று ஒரு மூதேவி நியூஸ் ஜேவில் இருக்கு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது. ஆனால் மேனேஜ்மெண்டுக்கு நெருக்கம்னு பில்ட் அப். வெத்து வேட்டுகளௌக்கு தான் மவுசு அதிகம் என்பதற்கு சிறப்பான உதாரம் இந்த பீஸ்’’ என்று ஒரு பெண்ணை பொதுவெளியில் கேவலமாக விமரிசித்துள்ளார். 

ஆகையால் கிஷோர் கே.சுவாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என அந்தப்புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்தப்புகார் 25.07.2019ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 67 நாட்களுக்கு பிறகு இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

click me!