கொடநாடு வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் சிக்கினார்... க்ரைம் போலீஸ் அதிரடி!

Published : Jan 12, 2019, 03:40 PM IST
கொடநாடு வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் சிக்கினார்...  க்ரைம் போலீஸ் அதிரடி!

சுருக்கம்

கொடநாடு கொள்ளை பற்றி ஆவண வீடியோ வெளியிட்ட  செய்தியாளர் மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கொடநாடு கொள்ளை பற்றி ஆவண வீடியோ வெளியிட்ட  செய்தியாளர் மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, ஆவணத் திருட்டு குறித்து தெகல்ஹா முன்னாள் ஆசிரியரும், செய்தியாளருமான மேத்யூஸ் டெல்லியில் செய்தியாளர்கள் முன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் எடப்பாடி பழனிசாமிக்கும் பங்கிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பின் போது கொடநாடு கொள்ளையில் குற்றம்சாட்டப்பட சயன், மனோஜ் ஆகியோரும், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  இந்த குற்றச்சாட்டு முற்றிலும் திசை திருப்ப வைக்கும் சதி.

இந்த வீடியோவை வெளியிட்டவர் மீதும், அவருக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட மேத்யூஸ், பேட்டியளியத்த சயன், மனோஜ் ஆகியோர் மீது தமிழக க்ரைம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!