"தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா" - சி.ஆர்.சரஸ்வதி புகழாரம்!!

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா" - சி.ஆர்.சரஸ்வதி புகழாரம்!!

சுருக்கம்

cr saraswathi praising sasikala

தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா என நடிகையும், அதிமுக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதி கூறினார். அதிமுக பொது கூட்டத்தில், அவர் பேசியதாவது:-

சசிகலா தனது குடும்பத்தை மறந்து 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்தார்.  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகியோர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறுகிறார்கள். கட்சி யாரிடம் இருக்கிறது. இவர்கள் எப்படி, நீக்க முடியும். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

விரைவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் காணாமல் போய்விடுவார்கள். இவர்களை ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சசிகலாவின் தியாகம் அளப்பரியது. அவர் நினைத்திருந்தால் எம்எல்ஏ.க்களின் ஆதரவோடு தனது உறவினரை முதல்வர் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை, பெரிய மனதுடன் முதல்வராக்கினார்.

சசிகலா மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானது. பொய்யானது. அவர், தியாகத்தின் மொத்த உருவம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல பேர் கேட்கிறார்கள்.

இப்போது நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!