"நீதி விசாரணை மூலம் சின்னம்மாவின் களங்கம் துடைக்கப்படும்" - சி.ஆர். சரஸ்வதி நம்பிக்கை!!

First Published Aug 19, 2017, 1:26 PM IST
Highlights
cr saraswathi about sasikala


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறோம் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் கூறி வருகிறார். 

அதனால், நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து நேற்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் பிரிவினையே இல்லை. அதிமுக அணிகள் ஒன்றாக சேருவதில் சந்தோஷம். கட்சியை பலப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எங்களுக்கு கட்சி முக்கியம்.

நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. தினகரன், சசிகலாவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணியினர் ஏன் ஒதுக்குகிறார்கள் என தெரியவில்லை. எங்களை ஏன்? ஒதுக்குகிறார்கள் என்ப அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணைக்கு கூறியதை மனதார வரவேற்கிறோம். இதன் மூலம் சின்னம்மாவின் கலங்கம் துடைக்கப்படும்.

click me!