டொனேஷன் வாங்கியது அரசியல் கூட்டணியில் ஒரு பகுதிதான்... திமுகவிடம் வாங்கிய பணம் பற்றி தோழர்கள் விளக்கம்!

By Asianet TamilFirst Published Sep 27, 2019, 8:55 AM IST
Highlights

சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு முறையே 15, 10 கோடி ரூபாயும், கொமதேகவுக்கு 15 கோடி ரூபாயும் டொனேஷன் கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திமுக தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் பெற்ற டொனேஷன் பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்துவோம் என்று அக்கட்சியின் தேசிய் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளான இடதுசாரிகள், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு திமுக டொனேஷன் கொடுத்தது பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு முறையே 15, 10 கோடி ரூபாயும், கொமதேகவுக்கு 15 கோடி ரூபாயும் டொனேஷன் கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திமுக தெரிவித்துள்ளது. ஆனால், இதைப் பற்றி சிபிஎம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிபிஐ இன்னும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இக்கட்சிகளுக்கு திமுக கொடுத்த டொனேஷன் பற்றியும், அக்கட்சிகள் செலவு செய்ததது பற்றியும் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, “திமுகவிடம் பெற்ற டொனேஷன் பற்றிய தகவல்களை கட்சியின் தலைமைக்கு தெரிவித்துள்ளதாகவும், அதை ஒருங்கிணைத்து அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போது தெரிவிக்கப்படும்” என்று சிபிஎம் மா நில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 
இதேபோல சிபிஐ அகில இந்திய செயலாளர் டி.ராஜாவும் திமுகவிடம் நிதி பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். “தமிழகத்தில் கட்சிக்காக திமுகவிடமிருந்து நிதி பெற்றது உண்மை. இது  நெறிமுறைகளுக்கு மாறானது அல்ல. இது அனைத்தும் வெளிப்படையானது. வங்கி மூலமே பரிவர்த்தனையும் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது அது எல்லாம் தெரிவிக்கப்படும்.  நிதி பெற்றது அரசியல் கூட்டணியில் ஒரு பகுதிதான்”  என்று டி. ராஜா தெரிவித்துள்ளார். 

click me!