மாட்டு கோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்... ரகசியம் சொன்ன பிஜேபி வேட்பாளர்!

Published : Apr 23, 2019, 11:24 AM IST
மாட்டு கோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்... ரகசியம் சொன்ன பிஜேபி வேட்பாளர்!

சுருக்கம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன் என பிஜேபி வேட்பாளர் கூறியிருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன் என பிஜேபி வேட்பாளர் கூறியிருக்கிறார்.

2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாடுகள் பல இடங்களில் கொடுமைப்படுத்தும் விதம் மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடு சார்ந்த தயாரிப்புகளில் மனிதனுக்கு நிறைய நன்மைகள் உள்ளன எனக் கூறினார்.

அதில் பெரிய விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் தான் எனக்கு வந்த புற்றுநோய் குணமானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன்" என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!