பசு மாடுகளை வளர்ப்பதால் குற்றமனநிலை குறையுமாம் !! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தான் சொல்றாரு !!

Published : Dec 10, 2019, 08:10 AM IST
பசு மாடுகளை வளர்ப்பதால் குற்றமனநிலை குறையுமாம் !! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தான் சொல்றாரு !!

சுருக்கம்

பசுமாடுகளை வளர்ப்பது ‘குற்ற மனநிலை’யை குறைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் .புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர்  பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நரடபெற்றது. அதில் பேசிய மோகன் பகாவத் “சிறைச்சாலைகளில் பசுக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும். ஏனெனில் பசு வளர்ப்பு, சிறைவாசிகளின் ‘குற்றவியல் மனநிலை’யைக் குறைக்க உதவுகிறது என்றார்.

பசுக் கூடங்கள் அமைக்கப்பட்ட சிறைச்சாலைகளில், சிறைவாசிகளின் குற்றவியல் மனநிலை குறைந்ததை வெவ்வேறு சிறைச்சாலைகளின் அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர்” என்று பகாவத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், “நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பசு வளர்ப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.உலகெங்கும் இந்த உண்மையை உணர்த்துவதற்கு, பசுவை வளர்த்த பின் ஏற்படும் சிறைவாசிகளின் மாற்றங் ளை உளவியல்  ஆராய்ச்சிக்கு  உட்படுத்தி, அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 “இந்தியாவில், மாடுகள் எப்போதும் ஒரு புனிதமான சூழ்நிலைக்காக வளர்க்கப்பட்டனவே, தவிர பால் மற்றும் அதன் பொருட்கள்ஒருபோதும் விற்கப்படவில்லை” என்றும் மோகன் பகாவத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!