கடுமையான காய்ச்சல்.. மூச்சு விடுவதில் சிரமம்.. கொரோனா அறிகுறியுடன் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

Published : Jun 16, 2020, 11:14 AM ISTUpdated : Jun 18, 2020, 10:44 AM IST
கடுமையான காய்ச்சல்.. மூச்சு விடுவதில் சிரமம்.. கொரோனா அறிகுறியுடன் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

சுருக்கம்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடுமையான காய்ச்சல் மற்றும்  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடுமையான காய்ச்சல் மற்றும்  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் கோரப்பிடியில் தலைநகர் டெல்லி சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திணறி வருகிறது. டெல்லி இதுவரை  42,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 16,427 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இன்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதால் உடனடியாக கொரோனா பரிசோதனையும் செய்யப்பட உள்ளது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!