அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்து சென்றது ஏன்..? நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Sep 13, 2022, 1:13 PM IST
Highlights

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செய்லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு  பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் அணியினர் வானகரம் சென்றிருந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இபிஎஸ் தரப்பு  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஜே சி டி பிராபகர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது ஏன்..? சசிகலா கூறிய ரகசிய தகவல்

இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் வன்முறை

அந்த மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும்,   அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி நகர் சத்யா, விருகை ரவி மற்றும் ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக புகார் கூறியுள்ளார்.  மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தங்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கவலரத்திற்கு மத்தியில் அலுவலகத்துக்குள் உள்ள  முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாக்கவே, அவற்றை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து  அவரது வாகனத்தில் வைத்ததாகக் கூறியுள்ளார். 

வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்.. கைதாகிறார் எஸ்.பி.வேலுமணி..? அதிர்ச்சியில் எடப்பாடி

ஆவணங்களை பாதுகாத்தோம்

நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில்  வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  எடப்பாடி. பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜேசிடி பிரபாகர் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை  செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்யின் நீதிமன்ற தோல்வியை மறைக்கவே முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை.! திமுகவை விளாசும் ஆர்.பி உதயகுமார்

click me!