புலிக் கொடியைக் கூட காட்ட முடியவில்லை இது சோழர்கள் படமா.. பொன்னியின் செல்வனை கழுவி ஊற்றிய கவுதமன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2022, 7:11 PM IST
Highlights

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என வ. இயக்குனர் கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார். சோழர்களின் கொடி புலிக்கொடியைக் கூட அவர்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் வரலாற்றை கையில் எடுக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

.
 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என வ. இயக்குனர் கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார். சோழர்களின் கொடி புலிக்கொடியைக் கூட அவர்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் வரலாற்றை கையில் எடுக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சோழப் பேரரசின் வரலாற்றை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் திரைக்கு வந்து வசூலைக் குவித்து வரும் நிலையில், அதுக்கு இணையான கடும் விமர்சனத்தையும் சம்பாதித்து வருகிறது. இதில் சோழ மன்னனான ராஜராஜனை இந்து மன்னனாக அடையாளப்படுத்த சதி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி பல உண்மைக்கு முரணாக தகவல்களை படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

சுத்த சைவ மன்னனான ராஜராஜனை காவிமாயப்படுத்த  முயற்சி படத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்றும் பலரும் கொந்தளித்து வருகின்றனர். இப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜனை இந்து மன்னனாக்க முயற்சிக்க பட்டுள்ளது என்றும் விமர்சித்துள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் வெற்றிமாறன் கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்: ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்று ஒரு மதமே இங்கு இல்லை: டிகேஎஸ்.

இந்நிலையில் அதே பாணியில் இயக்குனர் வ. கௌதமன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்து அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி மற்றும் அதன் வசூல் மூலம் சினிமாத்துறை அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சிதான். ஆனால் வரலாற்றை சொல்லும் போது சரியாக அதைச் சொல்ல வேண்டும்.

சோழப் பேரரசு மாபெரும் பேரரசு, இது போன்ற ஒரு பேரரசின் வரலாற்றை சொல்பவர்கள் முதலில் தமிழர்களாய் இருக்கவேண்டும் என்று கூட அவசியமில்லை ஆனால் தமிழ் உணர்வுடன் சொல்ல வேண்டும்,சோழர்களின் புலிக்கொடியை கூட இப்படத்தில் காட்ட முடியவில்லை, இது பான்இந்தியா படம் என்றால் எப்படி, இந்துத்துவாவை பேசவேண்டும், தமிழனின் அடையாளம் மறைய வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் நோக்கம். கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்தவர்கள் வன்னியர்கள்,  தேவர்கள் அப்படி சொல்லவில்லை என்றாலும் தமிழர்கள் என்று கூடச் சொல்லவில்லையே ஏன்.

இதையும் படியுங்கள்:  'பொன்னியின் செல்வன்' படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம் இது! படம் பார்த்த பின் பூரிப்புடன் பேசிய கமல்

இந்த மண்ணில் பிறந்தவன் மண்ணை ஆண்டான், ஆண்டது தமிழன் ஆனால் ஆண்டது தெலுங்கர்கள் என்று எப்படி சொல்வீர்கள். இந்த மண்ணை ஆண்டவன் இந்த மண்ணுக்கு உரியவன், அது தேவர், வன்னியர், பறையர் யாராக இருந்தாலும் தமிழன் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார். இதே நிலை இரண்டாம் பாகத்தில் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். 
 

click me!