ஊழல் புகார் பரிசீலனை... ஆளுங்கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே முற்றும் மோதல்..!

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2020, 5:53 PM IST
Highlights

அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஊழல் புகார் மனு தயார் செய்து, கவர்னரிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 


ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், கவர்னருக்கும் இடையில் உரசல் அதிகமாகி வருகிறது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க, அரசு தரப்பில், விசாரணை கமிஷன் அமைத்தார்கள். இது குறித்து, கவர்னரிடம் ஆலோசிக்காததால், அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஊழல் புகார் மனு தயார் செய்து, கவர்னரிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இந்த மனு குறித்து, கவர்னர் பரிசீலித்து வருவது, ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரின் கீழ் உள்ள, பல்கலை துணைவேந்தர்கள், ஆளுங்கட்சி சொல்வதை கேட்பது இல்லை. சமீபத்தில், திருவள்ளுவர் பல்கலையில் பதிவாளரை தேர்வு செய்ய, நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்தார்கள். அதற்கு ஆளுங்கட்சியான அதிமுக தரப்பில் இருவரை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அந்த இருவருக்கும் உரிய தகுதி இல்லை என துணைவேந்தர் நிராகரித்து விட்டார் என்கிறார்கள். 
 

click me!