40-ல் பக்கவா செலக்ட் பண்ணி தூக்கிய 32 தொகுதிகள்... தொகுதிக்கு 3 பேரு! தூசு தட்டி எடுத்த கார்ப்ரேட் நிறுவனம்!!

By sathish kFirst Published Dec 25, 2018, 8:12 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்காமல் இருக்கும் நிலையில், ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியல், தொகுதி விவரம் ஒட்டுமொத்த லிஸ்ட்டையும் கையில் வைத்துக் கொண்டு தேர்தல் அறிவிப்புக்காக கொண்டிருக்கிறார்.

திமுகவை இயக்கிக் கொண்டிருக்கும் ஓ.எம்.ஜி என்ற கார்ப்ரேட் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒரு அசைன்மென்ட் கையில் எடுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் நடந்த அத்தனை தேர்தல்களின் டேட்டாக்களை எடுத்து வைத்துள்ளதாம்.

நாடாளு மன்ற தேர்தல்களில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டார்கள்? அவர்களது பின்புலம் என்ன? எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள்? அவர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு? என்ற மொத்த டீட்டெய்ல்ஸ் கையில் வைத்துள்ளார்களாம்.

பிறகு, ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள்? இதில் ஆண் பெண் எவ்வளவு? அரசு ஊழியர்கள்  என தொடங்கி சாதி வாரியாக எடுத்துள்ளார்கள். மதத்திலும், அதன் உட்பிரிவிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது வரை தனித்தனியாகப் பிரித்து  மொத்தமாக எடுத்துள்ளார்களாம். இந்த டேட்டாவை கையில் வைத்துக் கொண்டுதான் அடுத்த வேலையை தொடங்கியிருக்கிறது ஓ.எம்.ஜி. குரூப்.

மொத்த டேட்டாக்களை தூசு தட்டி எடுத்த அந்த குரூப், கடைசியாக ஒரு லிஸ்ட்டை திமுகவிடம் கொடுத்ததாம்,  அதாவது 32 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பேரை செலக்ட் செய்திருக்கிறார்கள். இந்த 3 பேர் என்பது தொகுதியில் இருக்கும் அறிமுகம், படிப்பு, பண வசதி, சாதி வாக்குகள், குடும்பத்துக்கு இருக்கக் கூடிய நற்பெயர் அல்லது கெட்ட பெயர், வழக்கு விவரம் என அத்தனையும் அலசி ஆராய்ந்து கடந்த தேர்தல்களையும் ஒப்பிட்டுதான் தொகுதிக்கு 3 பேரை தேர்வு செய்திருக்கிறார்களாம். இந்த  டேட்டாவை எடுக்கவே சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் ஆனதாம்.

இந்த பட்டியலில் வழக்கமாக இருக்கும் ஃபஸ்ட் லிஸ்டில், சென்னையில் தயாநிதி மாறன், நீலகிரி ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஜகத் ரட்சகன் என லிஸ்டில் இடம்பிடித்துள்ளார்களாம்.

click me!