கொரோனா பாதிப்பு... திமுக முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

Published : Aug 20, 2020, 12:13 PM ISTUpdated : Aug 23, 2020, 01:00 PM IST
கொரோனா பாதிப்பு... திமுக முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

சுருக்கம்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இன்று சென்னையில் உயிரிழந்தார்.  

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இன்று சென்னையில் உயிரிழந்தார்.

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆனால், விருதுநகர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மறைவு கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!